முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வருகின்ற 15. 07. 2024 அன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ளதையொட்டி, சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் இன்று (09. 07. 2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.