சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏர்னாபுரம் கட்டபுள்ளியான்காடு பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 75), இவர், தன்னுடைய வீட்டில் கிடா ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். வீட்டில் கட்டி இருந்த கிடாவை அவிழ்க்க சென்றபோது திடீரென கிடா, பச்சமுத்துவை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் பச்சமுத்துவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பச்சமுத்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.