சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாரமங்கலம், எம். ஓலைப்பட்டி நாடார் காலனியைச் சேர்ந்தவர் செல்வி(48). இவரது மகள் நித்தியா(22), தாரமங்கலத் தைச் சேர்ந்த சக்திவேல் மகன் தினேஷ்(25) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனி குடித்தனம் போவது குறித்து. நேற்று முன்தினம் இரவு, தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் நித்தியா தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால், தினேஷ் உள்ளே சென்று பார்த்த போது. நித்தியா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தாரமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு iஅனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர். திருமணமாகி 4 மாதமே ஆவதால், மேட்டூர் சப் கலெக்டர் விசாரணை செய்து வருகிறார்.