சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

69பார்த்தது
சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்கம் மையம் சிஐடியு சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய பணமாக்கும் திட்டத்தை ரத்துசெய்து தனியார் மயமாக்கும் அனைத்து வடிவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாதசம்பளம் 26 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர் மாறிச் சென்றாலும் பணி பாதுகாப்பை உத்ரவாதம் வேண்டும்.

நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர சலுகைகளை அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ஊழியர் வைப்புநிதி மற்றும் ஓய்வூதிய நிதி முதலானவற்றிற்கு முதலாளிகள் தொகை செலுத்தாவிட்டால் கட்டவேண்டிய அபராத விகிதத்தை குறைத்து அறிவிப்பை வெளியிடப்பட்டிருப்பதை ரத்துசெய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஈபிஎஸ் பென்சனுக்கு குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் அமல்படுத்த வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள், ஆஷா ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்கள் போன்ற திட்ட ஊழியர்கள் அனைவரையும் அங்கீகரித்து நிரந்தர ஊழியர்கள் ஆக்கிடவேண்டும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி