சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 57). மேளம் அடிக்கும் தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த கணேசனின் மகன்கள் முருகேசன், சுரேஷ் ஆகியோர் தனசேகரன் வீட்டுக்கு வந்து மது குடிக்க பணம் கொடுக்குமாறு கூறி அவரை தகாத வார்த்தையால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணன், தம்பிகளான 2 பேரும், தனசேகரனை அடித்து கொன்று விடுவதாக மிரட்டினார்களாம். இதுகுறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகேசன், சுரேஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.