சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அசைவ உணவைக் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், முஸ்லீம் மாணவர் பேரவையின் மாநில துணைத் தலைவர் அஸ்கர் மாவட்ட ஆட்சியிடம் இன்று (ஜூலை 9) மனு அளித்தார். மனுவில், உணவு என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை, இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.