சேலம் குகை நேரு நகரை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது 40). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. நிர்மல்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. விஷம் குடித்த அவர் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் அருகே மயங்கிக் கிடந்தார்.
இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(செப்.17) நிர்மல்குமார் பரிதாபமாக இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.