சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. 2014-ம் ஆண்டில் இளங்கலை, முதுகலை படிப்பு முடித்து பட்டம் பெற்ற 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கல்லூரி கால பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 7 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் விசாகவேல் கல்லூரி வளர்ச்சி குறித்து பேசினார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த கல்லூரிக்கும், பயிற்றுவித்த பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி தங்களது நன்றியை தெரிவித்தனர்.