சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் காவிரி ஆற்றங்கரையையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதில் 30 வீடுகள், பாலம், குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளிட்டவைகள் வெள்ள நீரில் மூழ்கியாதல் விவசாயிகள் பெரும் கவலை.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் கர்நாடாக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் நிரம்பியதை அடுத்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணை 43வது முறையாக அதன் முழு கொள்ளவுவான 120 அடியை எட்டியது.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடபடுவதால் காவேரிபட்டி மதிக்கிழான் திட்டு, மணக்காடு பகுதியில் 30 வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. காவேரி பட்டி பரிசல் துறையில் உள்ள பஞ்சமுக விநாயகர், ராகு, கேது கோயில்கள் உள்பட அதனைசுற்றியுள்ள கோயில்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், கல்வடங்கம், காவேரி பட்டி, வெள்ளாளபாளையம், அண்ணமார் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி, இராமக்கூடல், வேலாத்தா கோவில், புளியம்பட்டி, உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம், உள்ளிட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர்.