ஆத்தூர் நகர மன்ற கூட்டம் தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. அப்பொழுது 4வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் தங்கவேல் பாட்டிலில் பெட்ரோல் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 'பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொள்வேன்' என்று கூறினார். அதிமுக நகரமன்ற உறுப்பினர் உமா சங்கரியின் 11வது வார்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர் இவ்வாறு செய்தார்.