காருடன் 26 கிலோ குட்கா பொருள் பறிமுதல்

84பார்த்தது
காருடன் 26 கிலோ குட்கா பொருள் பறிமுதல்
ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பிரிவு ரோடு தரைப்பாலம் அருகில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரில் இருந்து சேலம் நோக்கி கார் ஒன்று வந்தது. போலீசாரை பார்த்ததும் காரை டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதைதொடர்ந்து போலீசார் அந்த காரை சோதனை செய்த போது காரில் தமி ழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் போன்ற போதைப்பொருட்கள் மூட் டைகளில் இருப்பது தெரியவந்தது. இதனைய டுத்து போலீசார் கடத்தி வந்த 26 கிலோ போதைப்பொருட்களையும், காரையும் பறிமு தல் செய்தனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் இருந்து தம்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி