நகை பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்

53பார்த்தது
நகை பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்
ஈரோடு மாவட்டம் குமலங்குட்டை செல்வம் நகர் பகுதியை சேர்ந்த மதன் (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவர் தன்னுடன் பணிபுரியும் சேலம் மாவட்டம் மாரிநாயக்கன்பட்டியை சேர்ந்த வினோத்கண்ணன் (21) என்பவருடன் சேர்ந்து மகளிர் சுய உதவிக்குழு கடன்களை வசூல் செய்தனர். பின்னர் திருச்செங்கோடு டாஸ்மாக் பாரில் மதன், வினோத்கண்ணன் இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது சங்ககிரி டி. பி. ரோடு காந்திகுப்பம் பகுதியை சேர்ந்த கவுதம் நிவாஷ் (19), அவருடைய நண்பர் ஜமக்காலன்காடு பகுதியை சேர்ந்த அசோக் இருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் 4 பேரும் சங்ககிரி ஆர். எஸ். விரியன்காடு பகுதியில் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது கவுதம் நிவாஷ், அசோக் இருவரும் மதன், வினோத்கண்ணனை தாக்கி அவர்களிடம் இருந்து 2½ பவுன் தங்க சங்கிலி, 2 செல்போன்களை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி போலீசார் கவுதம் நிவாஷ், அசோக் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை நீதிபதி என். பன்னீர்செல்வம் விசாரித்து கவுதம் நிவாஷ், அசோக் இருவருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி