சேலம்: அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்று உயிர்போன சோகம்

4பார்த்தது
சேலம்: அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்று உயிர்போன சோகம்
சேலம் பொண்ணம்மாப்பேட்டை புதுதெருவைச் சேர்ந்தவர் முருகன், இவரின் மகன் சக்திவேல். இவர் திருமண விழாக்களில் பூக்களை வைத்து அலங்காரம் செய்யும் பணியைச் செய்து வந்தார். நேற்று காலை வாழப்பாடி வேப்பிலைப் பட்டியலில் இருந்து சேலம் நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தார். அம்மாபேட்டை காமராஜர் காலனிப் பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். 

அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் பைக்கில் இருந்து தவறிவிழுந்த சக்திவேல் பேருந்தின் டயரில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி