சேலம்: வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முறை சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் வருகின்ற 16ஆம் தேதி சனிக்கிழமை, 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 23ஆம் தேதி சனிக்கிழமை, 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி 18 வயது நிறைவடைந்தோர் சேர்த்தல் படிவத்தை வழங்கி பெயரை பதிவு செய்து கொள்ளவும், மற்றும் இடம் மாறுதல் செய்தோர் முகவரி மாற்றம் செய்து கொள்ளவும், மற்றும் நீக்கல் செய்வோரும் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.