சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

71பார்த்தது
சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா, சோளகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 24). இவர் சேலத்தில் உள்ள ஒரு துணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் சூரமங்கலம் தர்ம நகர் 3-வது வீதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது எஸ். கொல்லப்பட்டியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி