சேலம் கந்தம்பட்டி பைபாஸ் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மனைவி வசந்தி (வயது 62). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவரை அழைத்துக் கொண்டு இரும்பாலை ரோட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் நகை, ரூ. 27 ஆயிரத்து 500 ரொக்கப் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வசந்தி வீட்டில் குடியிருக்கும் குமார் (32) என்பவர் நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.