தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்

83பார்த்தது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சந்தீப் சிங் நேகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீர்க்கும் கூட்டம் சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சந்தீப் சிங் நேகி தலைமையில் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் உள்ள அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ஹிமான்ஷூ தலைமையிலும், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் வீரேஷ் தலைமையிலும் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டம் உறுப்பினர்களுக்கு காலை 11. 30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. தொழில் அதிபர்களுக்கு மாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் கூட்டம் நடக்கிறது. எனவே வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் பெயர், நிறுவன முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் இன்றுக்குள் (வெள்ளிக்கிழமை) மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி