சேலம் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

78பார்த்தது
சேலம் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
சேலம் சூரமங்கலத்தை அடுத்த காமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தூங்க போவதாக கூறி விட்டு சென்ற விஜயகுமார் நேற்று காலை தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விஜயகுமார் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி