ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி யார் அவர்? போலீசார் விசாரணை

1063பார்த்தது
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி யார் அவர்? போலீசார் விசாரணை
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவருக்கு 25 வயது இருக்கும். இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரயிலில் அடிப்பட்டு இறந்த வாலிபர் யார்? , எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி