சேலம் கிழக்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: -
வீரபாண்டி சட்டசபை முன்னாள் உறுப்பினரும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் பணியாற்றிய வீரபாண்டி ஆ. ராஜாவின் 3-ம் ஆண்டு நினைவுநாள் வருகிற 2-ந் தேதி அவரது சொந்த ஊரான பூலாவரியில் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆ. ராஜாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் தொண்டர்களும், அவர் மீது பற்றும், பாசமும் கொண்ட பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.