அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

55பார்த்தது
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியானது தரக்கட்டுப்பாடு அமைப்பின் சார்பில் கற்பித்தல் முறைகள் என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் நடந்தது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் கான்பிடே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், மெய்திறன் பயிற்சியாளருமான சரவண பெருமாள் கலந்து கொண்டு கற்பித்தல் முறைகள் மற்றும் அதனை சார்ந்த திறன்களை மேம்படுத்துதல், மாணவர்களை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இதில் துறையை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துறையின் பேராசிரியை தமிழ்சுடர் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி