சேலம் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்

59பார்த்தது
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.
சேலம் அன்னதானப்பட்டி விநாயகர் மாரியம்மன் மற்றும் திரௌபதி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நடைபெற்ற தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம் செவ்வாய்பேட்டை வழியாக மேளதாளம் முழங்க சுமார் 3 கிலோமீட்டர் சென்று அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து தீர்த்த குடங்கள் அனைத்தும் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி