கியாஸ் நிறுவன மேலாளர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

1042பார்த்தது
கியாஸ் நிறுவன மேலாளர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
சேலம் எருமாபாளையம் காஞ்சிநகரை சேர்ந்தவர் மணிவேல் (வயது 35). இவர் தனியார் கியாஸ் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பவித்ரா. இவர் நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இதேபோல் வழக்கம்போல் காலையில் பணிக்குச் சென்ற மணிவேலும் பணி முடிந்து இரவில் வாழப்பாடியில் உள்ள அக்காள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

நேற்று காலை அவர் தனது வீட்டுக்கு மீண்டும் திரும்ப வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிவேல் வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 23 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி