சேலம் இரும்பாலை பஞ்சமிகாட்டை சேர்ந்தவர் மணி முத்து. இவரது மனைவி தங்கமணி (வயது 55). தொழிலாளிகள். இவர்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து தங்கமணி இரும்பாலை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை ஆய்வு செய்து நகையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.