தி.மு.க. சார்பு அணி பதவிகளுக்கு நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம்

53பார்த்தது
தி.மு.க. சார்பு அணி பதவிகளுக்கு நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம்
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய, பகுதி, பேரூர் அளவில் ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் வீதம் மாணவர் அணிக்கு நியமிக்கப்பட உள்ளனர். எனவே விருப்பம் உள்ள கட்சி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் மாளிகையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணி முதல் அதற்கான விண்ணப்பத்தை படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். ஒன்றிய, பேரூர் மாணவர் அணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள்ளும், டிப்ளமோ அல்லது பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிவர்களுக்கான நேர்காணல் வருகிற 22-ந்தேதி காலை 8.30 மணி முதல் 11.30 மணிவரை நடைபெறும்.

அதே போன்று சார்பு அணிகளுக்கு ஒன்றிய, பகுதி அளவில் ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள், பேரூர் அளவில் ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு விண்ணபத்தை பெற்ற அன்று மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மகளிர் அணி, உள்ளிட்ட அனைத்து அணி பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 19-ந்தேதி காலை 9 மணி முதல் நேர்காணல் நடக்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி