சென்னையில் படுகொலை செய்யப்பட்ட BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு, சேலம் முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மலரஞ்சலி.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங் அஞ்சலி செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் சேலம் நீதிமன்ற நுழைவு வாயிலில் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் திரு உருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் நடைபெற்றது.