சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: 2 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்

57பார்த்தது
சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: 2 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தவ்பீக், அப்துல்தமீம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர்களில் தவ்பீக் கடலூர் சிறைக்கும், அப்துல் தமீம் கோவை மத்திய சிறைக்கும் மாற்றி அங்கு அடைத்தனர். இவர்கள் இருவரும், சேலம் சிறையில் ஆய்வு நடத்த வந்த ஒருங்கிணைப்பு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதற்காக 2 பேரும் வெவ்வேறு சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி