கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாமிகோட்டை பகு தியை சேர்ந்த தங்கவேல் மகன் கிரிதரன்(21) பி. இ. சிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் பெற்றோர் கிரிதரனுக்கு போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கிரிதரனின் அறைக்கு சென்றார். அங்கு அறை திறந்து கிடந்ததுடன் மாணவர் உள்ளே இல்லை. பல் வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடைசியாக கழி வறைக்கு சென்றார். அங்கு ஒரு கழிவறை மட்டும் உள் தாழிட்டு பூட்டி இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் விடுதி மாணவர்களின் உதவியுடன் காப்பாளர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார்.
அப்போது அமர்ந்த நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் கிரித ரன் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு டால்மியா போர்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாண வர் கிரிதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன் மணி மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று கிரிதர னின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.