தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவில் வலுதூக்கும் போட்டி இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் கட்டிடத்தில் நடைபெற்றது. சேலம் தியாகராஜ பாலிடெக்னிக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கவின் 105 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதேபோன்று சோனா கல்லூரி மாணவர் அருண் 74 கிலோ பிரிவில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கம் பெற்றவர்களை, மாநில வலுதூக்கும் சங்க செயலாளர் இளங்கோவன், சேலம் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் பழனிமுத்து, பொருளாளர் தேவகுமார் ஆகியோர் சான்றிதழ், பதக்கம் வழங்கி பாராட்டினர்.