சேலம்: சட்டவிரோத செயல்கள்.. துணை போகும் போலீசார் மீது கடும் நடவடிக்கை

59பார்த்தது
சேலம்: சட்டவிரோத செயல்கள்.. துணை போகும் போலீசார் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி. ஜி. பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -தமிழகத்தில் உள்ள உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது குற்ற வழக்குகள், கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் குறித்தும், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 35 உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இதில் சிவில், குடும்ப தகராறு வழக்குகள் தான் அதிகம் பதிவாகி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் இன்று ஆய்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. குறிப்பாக மாதத்துக்கு 150 முதல் 160 கொலைகள் நடைபெறும். தற்போது அது குறைந்துள்ளது. 

குறிப்பாக ரவுடிகள் கொலை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனை மேலும் குறைக்க ஊரக உட்கோட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளோம். கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து நடக்கும் கொலைகளை தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கும் பவாரி கும்பலுக்கும் எந்த தொடர்பும் கி

தொடர்புடைய செய்தி