நடப்பு 2023-2024-ம் நிதியாண்டின் 2ம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் முதலியவற்றை செலுத்த ஏதுவாக பொதுமக்கள் வசதி கருதி பிப். 25-ஆம் தேதியன்று சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ. பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் நிலுவையில் உள்ள வரித்தொகையை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.