சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோவில் சிறப்பு பூஜை

62பார்த்தது
குரோதி ஆண்டு முடிவடைந்து விசுவாவசு ஆண்டு துவங்குகிறது தமிழ் புத்தாண்டு தினமான இன்று தமிழக முழுவதும் திருக்கோவில்களில் பல்வேறு விதமான சிறப்பு வைபவங்கள் நடைபெறும். அதேபோல சேலம் மாவட்டத்திலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறறது. அதன் ஒரு பகுதியாக சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள சாஸ்தா நகர் ஸ்ரீ ஐய்யப்பா ஆசிரமத்தில் அதிகாலை கணபதி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் சபரிமலையில் செய்யக்கூடிய பூஜைகள் போன்றே சேலம் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் தந்திரி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு விதமான காய் கனிகளுடன் மூலவருக்கு விசு கனி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தந்திரி கேரளா முறைப்படி சிறப்பு பூஜை செய்தார். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை வழிபட வரும் பக்தர்களுக்கு ஐயப்பன் பாதத்தில் வைக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமும், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி