சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறப்பு விருது

56பார்த்தது
சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறப்பு விருது
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தனியார் நாளிதழ் சிறப்பு அங்கீகார விருது வழங்கி உள்ளது. இது குறித்து துறையின் டீன் செந்தில்குமார் கூறியதாவது: -
இந்தியாவின் பிரபல நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களையும், நிறுவனங்களையும் பல்வேறு சிறப்புகளின் கீழ் அடையாளம் கண்டு அவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகளையும், அங்கீகாரங்களையும் வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இதில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவ, மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் முனைவோர் சார்ந்த முன்னணி நடவடிக்கைகளை மையப்படுத்தி அங்கீகார விருது வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு கல்வி மட்டும் வழங்காமல், சிறந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, அவர்களுக்கு துறை சார்ந்த மற்றும் இதர ஆர்வம் சார்ந்த தொழில் முனைவோராக மாற்றுவதற்கு கல்லூரி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த விருது வழ்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். இந்த விருதை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். விருது பெற்றதற்காக பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா கணேசன் ஆகியோர் டீன் செந்தில்குமாரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி