சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்

1173பார்த்தது
சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்
சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது அமைதியை கெடுக்க அனுமதிக்க கூடாது என்றும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநாட்டில் கலந்து கொண்டு சேலம் திரும்பிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் 'தினத்தந்தி' நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு: - சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொது விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளேன். காரிப்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்கள் விரைவில் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் வர உள்ளது. அதற்கு பதில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

தொடர்புடைய செய்தி