திருவள்ளுவர் தினத்தையொட்டி வரும் 15 ஆம் தேதி சேலம் மாநகரப் பகுதிகளில் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி ஆணையர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் 15 ஆம் தேதி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், திருவள்ளுவர் தினமான வரும் 15 ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.எனவே, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை மூடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.அரசின் உத்தரவை மீறி சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.