தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

66பார்த்தது
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு வைத்தார். தொடர்ந்து சுற்றுச்சூழலை காப்பதன் முக்கியத்துவங்கள் பற்றி விளக்கம் அளித்து பேசினார். பின்னர் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் கல்லூரி வளாகத்தில் 150 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும், ஒரு மரக்கன்றுகளை பராமரிப்போம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், தேசிய மாணவர் படை அலுவலர், மாணவ, மாணவிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி