சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி செல்லும் பஸ்கள், இலகுரக வாகனங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு சந்திப்பு வலது புறம் திரும்பி அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும். அதேபோல், பழைய பஸ் நிலையத்தில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக ஜங்ஷன் செல்லும் பஸ்கள், இலகுரக வாகனங்கள், வழித்தடம் மாற்றப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு சந்திப்பு வழியாக இடதுபுறம் திரும்பி ஜங்ஷன் செல்ல வேண்டும். ஜங்ஷன், 5 ரோட்டில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக பழைய பஸ் நிலையம் செல்லும் பஸ்கள், ஜங்ஷனில் இருந்து 5 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு சந்திப்பு, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக மணக்காடு ரோடு, பிள்ளையார் நகர் சந்திப்பு, சுந்தர்லாட்ஜ் வந்து மேம்பாலம் வழியாக பழைய பஸ் நிலையத்தை அடைய வேண்டும்.