கராத்தே போட்டியில் சேலம் மாணவ, மாணவிகள் சாதனை

70பார்த்தது
கராத்தே போட்டியில் சேலம் மாணவ, மாணவிகள் சாதனை
கோவையில் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர். 

போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் சிறப்பாகச் செயல்பட்டு சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனரும், தேசிய பயிற்சியாளருமான ஆர். சுதாகர் பயிற்சி அளித்தார். மேலும் சாதனை படைத்த மாணவர்கள், மாணவிகளையும், பயிற்சியாளர் ஆர். சுதாகரையும் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், செண்பகராஜ், சரவணன், பிரியங்கா, வினோத்குமார், ஆதித்யா மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி