தேசிய வாள் சண்டை போட்டியில் சேலம் மாணவர்கள் சாதனை

81பார்த்தது
தேசிய வாள் சண்டை போட்டியில் சேலம் மாணவர்கள் சாதனை
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் தேசிய அளவிலான வாள் சண்டை போட்டி நடந்தது. இதில் 10 வயது மற்றும் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் சேலம் குளூனி வித்யா நிகேதன் பள்ளி மாணவன் எம். லக்‌ஷன், ராயல் பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவன் இ. நவீன், குளூனி வித்யா நிகேதன் பள்ளி மாணவி பி. வர்ஷினி ஆகிய 3 பேரும் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை மாணவ- மாணவிகளை சேலம் மாவட்ட வாள் சண்டை அசோசியேசன் தலைவர் எஸ். பி. கோசலம், செயலாளரும், அரசு வக்கீலுமான வஸ்தாத் ஆர். கிருஷ்ணன், பயிற்சியாளர் டி. மணிகண்டன் மற்றும் சந்திரா புக்‌ஷாப் ஜி. சுப்புராமகிருஷ்ணன், எம். ஜி. தத்தாதிரி உள்பட பலர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி