பொங்கல் பரிசுக்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு டோக்கன் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நியாயவிலை கடைக்காரர்கள் மூலம் ஜனவரி 3-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட உள்ளது. மேலும், பொங்கல் பரிசை ஜனவரி 9 முதல் நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.