எம்பிபிஎஸ், பிடிஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்று (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே எம்பிபிஎஸ், பிடிஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சுமார் 12,000 மருத்துவ இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.