சேலம்: கலால் வரி அதிகாரி வீட்டில் கதவை உடைத்து திருட்டு

62பார்த்தது
சேலம்: கலால் வரி அதிகாரி வீட்டில் கதவை உடைத்து திருட்டு
சேலம் ரெட்டியூர் சிவாயநகர் இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மத்திய அரசின் கலால் வரி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி தனது சொந்த ஊரான நாமக்கல்லுக்கு தனது மனைவியுடன் சென்றார். 

பின்னர் நேற்று (டிசம்பர் 25) வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த வெள்ளி அரைஞான் கொடி உள்பட ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி