சேலம், செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லைன் ரோடு பகுதியில் இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்து வந்தது தொடர்பாக கிடைத்த தகவல் அடிப்படையில், செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரிடம், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அக்கோட்டத்தின் முன்னாள் திமுக கவுன்சிலரும் தற்போதைய கவுன்சிலரின் கணவரும், போலீஸ் அதிகாரியை விசாரணை செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.