ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து
பாஜக வெளியிட்டுள்ள போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பல தலைகள் கொண்ட ராவணனாக சித்தரித்து
பாஜக வெளியிட்டுள்ள போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று
பாஜக வுக்கு எதிராகவும்,
பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன கோசங்கள் எழுப்பினர். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில்
பாஜக ஈடுபட்டால் தாங்களும் இதைவிட தீவிரமாக செயல்படுவோம் என எச்சரித்தனர். மேலும் மோடிக்கு பத்து தலைகளை வைத்து ராவணனைப் போல் பேனர் அடித்து
ஆர்ப்பாட்டம் செய்தனர்