சேலம்: கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து

60பார்த்தது
சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு.

சேலம் அருகே மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயரியில் படித்து வருகிறார். இவருக்கு ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் இன்று காலை பழைய பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் வாலிபர் திடீரென கத்தியை எடுத்து கல்லூரி மாணவியை குத்தி விட்டு தனது கை மற்றும் கழுத்தில் கத்தியால் கிழித்து கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் பகுதியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி