சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டு சேலைகளை மதிப்பீடு செய்து, அதற்குப் பதில் புதிய பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை வருகிற 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பட்டு சேலைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியுடன் விற்பனை நடைபெறுகிறது. இந்த தகவலை மண்டல மேலாளர் மா. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.