சேலம் அம்மாப்பேட்டை யில் பட்டைக்கோவில் என்று அழைக்கப்படும் பிரசன்ன வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை விஷ்வரூப தரிசனம், 5-ம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தது. கோபுர கலசங்கள் மீது பட்டாச்சார்யர்கள் புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கோவிலை சுற்றி நின்றிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் பிரசன்ன வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று மாலை பெருமாள், தாயாருக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் புறப்பாடும் நடந்தது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.