சேலத்தில் 1700 கலைஞர்கள் ஒரே மைதனத்தில் நடராஜர் வடிவத்தில் அணிவகுத்தனர். பரதத்தின் அதிபதியாக போற்றப்படும் நடராஜருக்கு மேளதாளம் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து அனைவரும் வழிபட்டனர். இதனையடுத்து பக்தி பாடல்கள் இசைக்க 27 நிமிடங்கள் தொடர்த்து நடனமாடி அசத்தினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்த்த 5 முதல் 55 வயதிலான பெண் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.