சேலம்: ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

50பார்த்தது
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணியிடம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்களுக்கான குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று (ஜனவரி 3) மாநிலம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்படி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) அலுவலகம், தணிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய அலுவலங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேபோல், சேலம், அயோத்தியாபட்டணம், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர், வீரபாண்டி, நங்கவள்ளி உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி