சேலம் தளவாய்பட்டியில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
சேலம் தளவாய்பட்டியில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் தளவாய்பட்டியில் உள்ள பி.எப்.அலுவலகத்தில் நேற்று அகில இந்திய பென்ஷன் கூட்டமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், மாணிக்கம், செல்வராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பென்ஷன்தாரர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாயை உயர்த்தி ரூ.9 ஆயிரமாக வழங்க வேண்டும். மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி